Advertisment

தமிழக சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை வேலை; 11 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி தகுதி; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

author-image
WebDesk
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Physiotherapists

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BPT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Post Graduate in Sociology/ Social Worker படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 23,800

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500 

MMU Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

MMU Attender cum Cleaner

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 8,500

Vaccine Cold Chain Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Supply Chain Management / Refrigerator and AC repair/ Social Sciences/ Material Management படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 8,500

MLHP

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: DGNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000

Multipurpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://kancheepuram.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், என்42ஏ, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் 631501.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://kancheepuram.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment