கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 20 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அருந்ததியர் பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் - 635115
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.