அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு அறிவிப்பு; 2 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு அறிவிப்பு; 2 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hospital worker

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 20 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அருந்ததியர் பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900 

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் - 635115

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Krishnagiri Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: