சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 56 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 56 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி தகுதி; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 56 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி தகுதி; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
nurses 2

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மருத்துவ அலுவலர் (Medical Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 60,000

செவிலியர் (Staff Nurse)

காலியிடங்களின் எண்ணிக்கை: 38

Advertisment

கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000

Audiologist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor in Audiology and Speech Language Pathology / B.Sc. (Speech and hearing) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

Programme cum Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் கணினி சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

Advertisment
Advertisements

கல்வித் தகுதி: Degree/ Diploma course in Radio Diagnosis Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,300

அறுவை அரங்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Theatre Technician கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,200

Consultant (Yoga and Naturopathy) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree of BNYS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

தரவு உள்ளீட்டாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma Course in Computer application படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

Senior Treatment Supervisor (STS) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor’s degree OR Recognized sanitary inspector’s Course மற்றும் Certificate course in computer operation படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 19,800

Senior Tuberculosis laboratory Supervisor (STLS) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். DMLT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,800

Tuberculosis Health Visitor 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். MPW/ LHV/ ANM/ Health worker/ Certificate or higher course in Health education/ Counselling படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

Occupational Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelors / Master’s degree in occupational Therapy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Special Educator for Behavioral Therapy 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor’s/ Master’s Degree in Special Education Intellectual Disability படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2025/08/17549841311901.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், இராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி மாவட்டம் - 635115

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Jobs Krishnagiri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: