Advertisment

சுகாதாரத் துறை வேலை; 34 காலியிடங்கள்; 8-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

மதுரை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 34 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
ESIC Chennai Recruitment 2019

மதுரை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

நகர்ப்புற சுகாதார மேலாளர்/ பகுதி சுகாதார செவிலியர் (UHM/ SHN)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : M.Sc Nursing படித்திருக்க வேண்டும். அல்லது B.Sc Nursing படித்து 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

மருந்தாளுநர் (Pharmacist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி : D.Pharm or B.Pharm படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

ஆய்வக நுட்புநர் (Lab Technician)

காலியிடங்களின் எண்ணிக்கை : 14

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Medical Lab Technology Course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW)

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/11/2023110166.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : செயற் செயலாளர் மற்றும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை - 625014

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/11/2023110141.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment