மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கணினி இயக்குபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் கிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,916
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2024/12/2024121231-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை - 609305
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2024/12/2024121231-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“