/indian-express-tamil/media/media_files/2025/01/01/AI5GxOQBwg7SJf8EErT5.jpg)
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் (Audiologist Speech Therapist)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor degree in audiology and speech language pathology/ B.SC (Speech and hearing) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 23,000
சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 13,000
இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider)
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
கல்வித் தகுதி: DGNM/ Bsc Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18,000
சுகாதார ஆய்வாளர் (Health Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multi Purpose Health worker (male) / Health Inspector/ Sanitary inspector course training படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 14,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2025/06/2025061758.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் - 637003
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.