நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 101 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சுகாதார செவிலியர் (Auxiliary Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ANM படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 14,000
மருந்தாளுனர் (Pharmacist)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
ஆய்வக நுட்புனர் (Lab Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 13,000
செவிலியர் (Staff Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை: 86
கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multipurpose Hospital Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 8,500
Occupational Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor/ Master Degree in occupational therapist படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master of Social Work படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,800
Special Educator for Behavioral Therapy
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor/ Master Degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2025/07/17532486086976.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் - 637003
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.