அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; ரூ. 15,000 சம்பளம்; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வேலை வாய்ப்பு; 6 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வேலை வாய்ப்பு; 6 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
hospital worker

நீலகிரி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஐ.டி மேற்பார்வையாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

IT Co-ordinator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MCA/BCA படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 15,000 

Echo Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BSc/ Diploma in Cardiac Technology / Diploma in Medical Imaging Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

வயது தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: முதல்வர், நிர்வாக அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்து நகர், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் - 643005

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Nilgiris Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: