புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Supply Chain Management / Refrigerator and AC repair படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 23,000
விபர உள்ளீட்டாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : Graduation in Computer Application/IT/ Business Administration/ B.Tech (C.S) or (1.T)/ BCA/ BBA/ BSC If/ Graduation with one year diploma/ certificate course in computer science படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
செவிலியர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Diploma in GNM / B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
சுகாதார ஆய்வாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
நகர்ப்புற துணை செவிலியர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: ANM படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
மருத்துவமனை பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pudukkottai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://pudukkottai.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.