Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிப்ளமோ தகுதி; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 4 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
AIIMS Recruitment 2019, Nursing Officer Grade B Recruitment- மத்திய அரசில் செவிலியர் பணி

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor (STS))

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor’s Degree OR Recognized Sanitary Inspector’s course, Certificate course in computer operation படித்திருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Advertisment
Advertisement

சம்பளம்: 19,800

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Graduate Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 19,800

ஆய்வக நுட்புனர் (Laboratory Technician) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma or certified course in medical Laboratory technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/12/2024122342.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் துணை இயக்குனர் (காசநோய்), மாவட்ட சுகாதார சங்கம், மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை - 622001

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.01.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Pudukkottai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment