மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 4 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 4 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
hospital worker

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.04.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Senior Treatment Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor Degree or Sanitary inspector course படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 19,800

Senior Tuberculosis Laboratory Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Graduate or Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,800 

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2025/04/2025041135.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், பி – பிளாக், 3 வது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், ராணிப்பேட்டை மாவட்டம் - 632403

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

ranipet Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: