தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Ombudsperson
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
மாவட்ட வாரியான காலியிடங்கள்
அரியலூர் -1, செங்கல்பட்டு -1, கோவை -1, தருமபுரி -1, காஞ்சிபுரம் -1, கன்னியாகுமரி -1, கரூர் -1, கிருஷ்ணகிரி -1, மதுரை -1, மயிலாடுதுறை -1, நாமக்கல் -1, ராமநாதபுரம் -1, சேலம் -1, சிவகங்கை -1, தஞ்சாவூர் -1, தூத்துக்குடி -1, திருச்சி -1, திருப்பத்தூர் -1, திருப்பூர் -1, திருவள்ளூர் -1, திருவண்ணாமலை -1, திருவாரூர் -1, வேலூர் -1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 45,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Commissioner of Rural Development and Panchayat Raj
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.