/tamil-ie/media/media_files/uploads/2018/07/contract-nurses.jpg)
சேலம் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு
சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் (STLS)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Diploma or Certificate course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,800
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு அல்லது Sanitary Inspector கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,800
காசநோய் சுகாதார பணியாளர் (TB HV)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://salem.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்), அறை எண் 413, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் – 636001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://salem.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.