சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Audiologist & Speech Therapists
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor in Audiology and Speech Language Pathalogy/ B.Sc (Speech and Hearing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.Sc Radiology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
Multipurpose Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sivaganga.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், நேரு பஜார், சிவகங்கை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://sivaganga.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“