சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 115 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 115 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 115 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
nurses 2

சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 115 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

செவிலியர் (Staff Nurse)

காலியிடங்களின் எண்ணிக்கை: 101

கல்வித் தகுதி: B.Sc (Nursing)/ GNM படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 18,000

மருந்தாளுநர் (Pharmacist)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B. Pharm/ D.Pharm படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,000 - 15,000

ஆய்வக நுட்புநர் (Lab Technician)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: B.Sc. (Medical Lab Technology)/ D.M.L.T. படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000 

சுகாதார ஆய்வாளர் (MPHW-HI Gr-II)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Multipurpose Hospital Worker/ Support staff

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2025/07/17528246603504.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Jobs Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: