/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலை வாய்ப்பு
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார திட்டத்தில் காலியாக உள்ள பகுப்பாய்வாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
MIS Analyst
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E or B.Tech in Computer Science / IT/ Computer Application / Master of Computer Application, Master Degree in computer / IT படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Project Director, Tamil Nadu State Rural Livelihood Mission, District Mission Management Unit, Tenkasi Collectorate Campus, Rail Nagar, Tenkasi – 627 811.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.