தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தென்காசி மாவட்டத்தில் இராஷ்ட்ரிய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மாவட்ட வள மைய அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MSW/ MBA படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 50,000
கணினி உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கூடுதலாக கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 22,000
வட்டார வள மைய பயிற்றுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 15,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tenkasi.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை கிளிக் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.