தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் தேசிய நலவாழ்வு திட்டத்தில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant Cum Accounts Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Com / M.Com படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 16,000
Lab Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: 8,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thanjavur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: செயற் செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, எல்.ஐ.சி பில்டிங் அருகில், தஞ்சாவூர் - 613001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.