தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர், ஆய்வக நுட்புனர், சுகாதார பார்வையாளர் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduate or Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,800
ஆய்வக நுட்புநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
காசநோய் சுகாதார பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை அறிவியல் அல்லது 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுகாதாரப் பணியாளராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2024/11/2024110838.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், இராசா மிராசுதாரர் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர் - 613001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2024/11/2024110838.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.