திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள வட்டார தரவு உள்ளீட்டாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 13,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிபரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.
முகவரி: கௌரவச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/11/2024110764.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“