தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக நுட்புனர், செவிலியர்,சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆய்வக நுட்புநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
இடைநிலை சுகாதாரப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: DGNM அல்லது BSC Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
பல்நோக்கு சுகாதார பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்/ துப்பரவு ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2024/11/2024112658.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி -628002
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2024/11/2024112658.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“