Advertisment

சுகாதாரத் துறை வேலை; 8-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Vaccine Cold Chain Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Supply Chain Management / Refrigerator and AC repair/ Social Sciences/ Material Management படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Counsellor/ Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Psychiatric Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 23,800 

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

Hospital Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 8,500

Multipurpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: கௌரவச் செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட சுகாதார அலுவலகம், துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tiruvannamalai.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment