Advertisment

தமிழக அரசு வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய வேலை வாய்ப்பு

தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,700 – 58,100

இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,700 – 58,100

துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,700 – 58,100

இரவுக் காவலருடன் கூடிய துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,700 – 58,100

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.சி, எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ctd.tn.gov.in/documents/10184/10937/stat.pdf/58044552-0112-4388-b732-3e08e68d83a9 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: தலைவர், தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2ம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், உயர் நீதிமன்ற வளாகம், சென்னை - 104

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட https://ctd.tn.gov.in/documents/10184/10937/stat.pdf/58044552-0112-4388-b732-3e08e68d83a9 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment