தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் நிபுணர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Expert – Energy Sector
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master’s degree in management, engineering or finance படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
Expert – Municipal Services- Water and Waste water Sector
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master’s degree in management, engineering or finance படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
Project Analysts
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Master’s degree in management particularly in finance படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: இந்தப் பணியிடங்களுக்கு சம்பளம், இதற்கு நிகரான மற்ற துறைகளில் உள்ள பதவிக்கு வழங்கப்படுவதைப் போல் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tnidb.tn.gov.in/media/tender_documents/-Application_Form_Format.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Chief Executive Officer, Tamil Nadu Infrastructure Development Board, 3 rd Floor, Tower-II CMDA Building Egmore, Chennai-8
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட https://tnidb.tn.gov.in/media/tender_documents/-Application_Form_Format.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“