திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பல்நோக்கு சுகாதார பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்/ துப்புரவு ஆய்வாளர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Programme cum Administrative Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: கணினி சார்ந்து இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
தர மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Dental/ AYUSH/ Paramedical with Hospital Administration/ Health Management/ Public Health படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 60,000
ஆய்வக நுட்புனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Medical Laboratory Technology course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
இயன்முறை வல்லுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor in Physiotherapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
துப்புரவு உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Operation Theatre Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் OT Technician Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,200
மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 60,000
Senior Tuberculosis Laboratory Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduate or Diploma in Medical Laboratory Technician course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,800
Health Visitor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை அறிவியல் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2024/11/2024112979.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: செயற் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், திருச்சிராப்பள்ளி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2024/11/2024112979.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.