சேலம், திருச்சி, கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 27 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Deputy Chief Legal Aid Defense Counsel
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : குற்றவியல் வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.40,000 – 60,000
Assistant Legal Aid Defense Counsel
காலியிடங்களின் எண்ணிக்கை : 11
கல்வித் தகுதி : குற்றவியல் வழக்கறிஞராக 1-3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000 – 35,000
Office Assistant / Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000 – 20,000
Receptionist cum Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Office Peon (Attendant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000 – 12,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட இணையதளப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட சம்பந்தப்பட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற சம்பந்தப்பட்ட மாவட்ட இணையதளப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“