/indian-express-tamil/media/media_files/5ZYNZPOw5ERKfif1wCeB.jpg)
விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பணிபுரிய தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என விழுப்புரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் ஒன்றிய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்திட மாவட்ட மகளிர் அதிகார மையம் (District Hub for Empowerment of Women DHEW) செயல்பட்டு வருகிறது. இந்த மகளிர் அதிகார மையத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த ஒரு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு கீழ் காணும் தகுதி மற்றும் முன் அனுபவம் தேவைப்படுகிறது. கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி பயன்பாடு ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 வருடம் தரவு மேலாண்மை, செயல் முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான அறிக்கை தயாரித்தல், அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கல்வி தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொகுப்பூதியம் மாதம் ரூ.20,000 (ரூபாய் இருபதாயிரம்) வழங்கப்படும்.
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அறை எண்.26, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் (https://viluppuram.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறை எண்.26, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் என்ற அலுவலகத்திற்கு 22.09.2025 மாலை 5.45 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2025 ஆகும். கடைசி தேதிக்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
பாபு ராஜேந்திரன், விழுப்புரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.