Advertisment

MBBS Admission: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS

(பிரதிநிதித்துவ படம்)

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் குறிப்பேட்டில் (Prospectus) குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் செயல்முறைக்கான விண்ணப்பப் பதிவுச் செயல்முறை தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி தேதியாகும். மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் ஆன்லைன் விண்ணப்பங்களின் தொடக்க நாளில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க 3,900 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,200 பேர் கட்டணம் செலுத்தி முடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: NEET UG 2023: தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்; விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி தேதி

மே மாதம் நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மொத்தம் 78,693 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். நீட் மதிப்பெண்கள் பாரா மெடிக்கல் மற்றும் ஆயுஷ் படிப்புகளின் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தவிர) சேர்க்கைக்கும் பயன்படுத்தப்படும்.

இந்தநிலையில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் குறிப்பேட்டில் (Prospectus) குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் குறிப்பேட்டின் படி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கடந்த ஆண்டை விட இந்த கல்வியாண்டில் ரூ.2,000 கூடுதலாக செலுத்துவார்கள். இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் (MBBS) மாணவர்கள் கல்விக் கட்டணமாக ரூ. 6,000 செலுத்துவார்கள். மொத்தக் கட்டணம் கடந்த ஆண்டின் ரூ.13,610 லிருந்து ரூ.18,093 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், பி.டி.எஸ் (BDS) மாணவர்கள் கல்விக் கட்டணமாக கடந்த ஆண்டு ரூ.2,000 செலுத்திய நிலையில், இந்த ஆண்டு ரூ.4,000 செலுத்துவார்கள். பல் மருத்துவ மாணவர்கள் மொத்தக் கட்டணமாக கடந்த ஆண்டு ரூ.11,610 செலுத்திய நிலையில், இந்த ஆண்டு ரூ.16,073 செலுத்துவார்கள்.

அதேநேரம், சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை கட்டணம் நிர்ணயிக்கும் குழு நிர்ணயிக்கும். இதுவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ.எஸ்.ஐ.சி., மருத்துவக் கல்லுாரி கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

”அரசு ஒதுக்கீடு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த ஆண்டை விட தகவல் குறிப்பேடு மிகவும் விரிவானது. சொற்களஞ்சியம், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவு மற்றும் கவுன்சிலிங் செயல்முறை குறித்த தகவல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் செயல்முறையை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த அட்டவணை நிரலும் கொடுக்கப்பட்டுள்ளது,” என்று தேர்வு செயலாளர் ஆர்.முத்துசெல்வன் கூறினார்.

குறிப்பிடப்பட்ட பள்ளிகளில் படித்ததை நிரூபிக்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடமிருந்து ஒரு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு மாணவர்கள் முதன்மைக் கல்வி அதிகாரியிடமிருந்தும் ஒரு கடிதத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த விதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. பெற்றோர் அடையாளச் சான்று வழங்க வேண்டிய அவசியத்தையும் தகவல் குறிப்பேடு வழங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 5,050 மருத்துவ இடங்கள் உள்ளன, அதில் 15% அகில இந்திய தொகுப்பிற்காக சுகாதார சேவைகள் இயக்குநரிடம் ஒப்படைக்கப்படும். மூன்று புதிய சுயநிதிக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி பெற்றதாகக் கூறியிருந்தாலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் இருந்து முறையான தகவல் பரிமாற்றத்திற்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், கே.கே. நகரில் உள்ள ESIC கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதன் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

DGHS இன்னும் இணைய போர்ட்டலை திறக்கவில்லை, ஆனால் அனைத்து மாநிலங்களும் ஒரே நேரத்தில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 10 மாலை 5 மணி. முதல் சுற்று கவுன்சிலிங் ஜூலை இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment