மணப்பெண் மேக்கப் முதல் தலை அலங்காரம் வரை; சென்னையில் பெண்களுக்கான ஒப்பனை பயிற்சி

பெண் தொழில்முனைவோர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; சென்னையில் ப்ரைடல் மேக்கப், ஸ்கின்கேர், தலை அலங்காரம் உள்ளிட்ட தொழில்முறை ஓப்பனை பயிற்சி நடைபெறுகிறது; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெண் தொழில்முனைவோர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; சென்னையில் ப்ரைடல் மேக்கப், ஸ்கின்கேர், தலை அலங்காரம் உள்ளிட்ட தொழில்முறை ஓப்பனை பயிற்சி நடைபெறுகிறது; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
braidal makeup

பெண்களுக்கான மணப்பெண் மேக்கப், ஸ்கின்கேர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போன்ற பல்வேறு வகையான மேக்கப் நுட்பங்கள் அடங்கிய தொழில்முறை பயிற்சி வகுப்பு சென்னையில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

தற்போது மணப்பெண் மேக்கப் சார்ந்த தொழில்களில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. வளர்ந்து வரும் இந்த ஃபேஷன் துறையில் அதிகமான பெண்கள் நுழைந்து வருகின்றனர். இந்த துறையில் சிறப்பாக செயல்பட நல்ல பயிற்சி அவசியம். அதற்கான அருமையான வாய்ப்பை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வாய்ப்பை வழங்குகிறது. ப்ரைடல் மேக்கப் தொடர்பாக இந்த நிறுவனம் சென்னையில் 3 நாட்கள் பயிற்சி வழங்குகிறது. 

இதுதொடர்பாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் ப்ரைடல் மேக்கப், ஃபேஷன், ஹெச்.டி.மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின்கேர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போன்ற அனைத்து வகையான மேக்கப்களையும் ஒரே இடத்தில் கற்பதற்கான முழுமையான தொழில்முறை ஒப்பனை பயிற்சி வகுப்பு (ப்ரோ மேக்கப் மாஸ்டர்கிளாஸ்), அக்டோபர் 10 முதல் 12 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

Advertisment
Advertisements

இதில் மேம்பட்ட மேக்கப்பின் நுட்பங்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப், ஃபேஷன் மற்றும் எடிட்டோரியல், நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கான ப்ரைடல் (மணமகள்) மேக்கப், கிளாஸ் ஸ்கின் மேக்கப், வியர்வை தடுக்கும் மேக்கப், முகதிருத்தம், சரும பராமரிப்பு, கண்களுக்கான மேம்படுத்தப்பட்ட மேக்கப், ஐ-ஷேடோ வரைவதற்கான நுட்பங்கள், புருவ அலங்காரம், தலைமுடி அலங்காரம், புடவை அணிதல் (மடிப்புகள்), ஹெச்.டி, 3டி, 4டி வகை மேக்கப்களின் நுட்பங்கள், தொழில் வளர்ச்சிக்காக போர்ட் ஃபோலியோ உருவாக்கம், செயல்முறை பயிற்சி உள்ளிட்டவை குறித்து கற்றுத்தரப்படும்.

பயிற்சியானது காலை 10 முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்திலும், 9543773337, 9360221280 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு அரசு சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துக் கொள்ள முன்பதிவு அவசியம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Jobs Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: