/indian-express-tamil/media/media_files/2025/05/21/eYZVIghul4JpCEZqW2tK.jpg)
தமிழக அரசு வழங்கும் ட்ரோன் இயக்கும் பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் ட்ரோன் பயிற்சி வரும் 09.09.2025 முதல் 11.09.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில், ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் விமானம் இயக்கும் அடிப்படைகள் குறித்த கண்ணோட்டம் வழங்கப்படும். மேலும், ட்ரோன்களின் வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், பராமரிப்பு முறைகள், அவசரநிலைக் கருவிகள், சிமுலேட்டர் பயிற்சி மற்றும் நடைமுறைப் பயிற்சி, அசெம்பிளிங், ப்ளைட் கன்ட்ரோலர் மற்றும் சென்சார் அளவுத்திருத்தம், கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு, ஏ.சி.டி (ACT) மற்றும் ரேடியோ டெலிபோனிக் போன்ற தொழில்நுட்பங்கள் பயிற்சியில் இடம்பெறும். மேலும், அரசு வழங்கும் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.
இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட வயதுத் தகுதியுடனும் குறைந்தபட்ச கல்வித் தகுதியான 10 ஆம் வகுப்பு தகுதியுடனும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது, தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரம் மற்றும் முன்பதிவு செய்ய விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். முன்பதிவு அவசியம்: 9543773337 / 9360221280. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.