Advertisment

செவிலியர்களுக்கு சூப்பர் சான்ஸ்; ஜெர்மன், ஜப்பான் மொழிகள் இலவச பயிற்சிக்கு தமிழக அரசு ஏற்பாடு

நர்சிங் படித்தவர்களே, வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பமா? ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை இலவசமாக கற்றுக் கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு

author-image
WebDesk
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை இலவசமாக கற்றுக் கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலை வாய்ப்பு பெறும் வகையில், அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக கற்றுக்கொடுக்க தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 

”முதல்முறையாக செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது. வெளிநாட்டு மொழியை கற்க விரும்பும் செவிலியர்கள் பி.எஸ்.சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் படித்திருக்க வேண்டும். செவிலியர்களின் வசதியை கருத்தில்கொண்டு மொழிப்பயிற்சியானது ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விரும்பும் செவிலியர்கள் முழு விவரங்களையும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 63791 79200 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.” இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

nurse Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment