திருமண புகைப்படம், வீடியோ எடிட்டிங் குறித்து பயிற்சி அளிக்கும் தமிழக அரசு; தொழில் முனைவோர் மிஸ் பண்ணாதீங்க!

போட்டோகிராபியில் ஆர்வமா? தமிழக அரசு வழங்கும் திருமண புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ எடிட்டிங் குறித்த 10 நாள் பயிற்சியில் கலந்துக் கொள்ளுங்கள்

போட்டோகிராபியில் ஆர்வமா? தமிழக அரசு வழங்கும் திருமண புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ எடிட்டிங் குறித்த 10 நாள் பயிற்சியில் கலந்துக் கொள்ளுங்கள்

author-image
WebDesk
New Update
photography

திருமண புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் தொடர்பாக ஆர்வமுள்ளவர்களுக்கு அருமையான வாய்ப்பு. சென்னையில் 10 நாட்கள் நடைபெறும் தொழில் முனைவோர் பயிற்சியில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருமண புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் பயிற்சி மார்ச் 25 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி பயிற்சி வகுப்பு நடைபெறும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் பாரம்பரிய புகைப்படம் எடுத்தல், திருமண புகைப்படம் எடுத்தல், புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, புகைப்பட நுட்பங்கள், உருவப் படங்களுக்கான நுட்பங்கள், ஆல்பம் வடிவமைப்பு, புகைப்பட மறுசீரமைப்பு, புகைப்பட குழுவை உருவாக்கி நிர்வகித்தல், புகைப்பட வணிகத்துக்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து கற்றுத் தரப்படும். மேலும், இதற்கான அரசு உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பிய ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதி செய்து தரப்படும். 

Advertisment
Advertisements

கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளம் அல்லது 8668108141, 8668102600 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறியலாம். பயிற்சியில் சேர முன்பதிவு செய்துக் கொள்வது அவசியமாகும்.

இதேபோல, தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மார்ச் 26 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்கள், பலவகையான பன், பிஸ்கட், கேக் வகைகள், ரொட்டி உள்ளிட்டவை தயாரிக்க கற்றுத் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: