செவிலியர் படிப்பு முடித்தவர்கள் ஜெர்மனியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்ரேசன் லிமிடெட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்ரேசன் லிமிடெட், தமிழர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தரும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் மூலம் வளைகுடா நாடுகள், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற்றுச் செல்கின்றனர்.
இந்தநிலையில், ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்ரேசன் லிமிடெட் ஜெர்மனியில் செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது டிகிரியில் செவிலியர் படிப்பு (DGNM or B.Sc Nursing) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 6 மாத பணி அனுபவம் அவசியம். 35 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: omclgerman2022@gmail.com
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய https://omcmanpower.tn.gov.in/index.php?lang=en என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடுமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.