Advertisment

10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு: 50% பாடத்திட்டம் குறைக்க முடிவு

rationalize syllabus For 10th , 12th board Exam up to 50% : குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உள்மதிப்பீடு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுக்கான தலைப்புகளாக இருக்காது

author-image
WebDesk
New Update
மாணவர்களுக்கு 'கருணை' காட்டிய முதல்வர் பழனிசாமி: 9, 10, 11-ம் வகுப்பு ஆல் பாஸ் அறிவிப்பு

Rationalize syllabus For 10th , 12th board Exam up to 50%:  கொரோனா பெருந்தொற்று  ஊரடங்கு காரணமாக   இழந்த வகுப்பு நேரத்தை ஈடு செய்யும் பொருட்டு 10, மற்றும் 12ம் வகுப்பு  2021ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் 40 முதல் 50 சதவீத பாடஅளவு குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

Advertisment

கற்றல் அளவை எட்டுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முக்கிய அம்சங்களைக் கை வைக்காமல், கூடிய மட்டும் 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

பாடத்திட்டத்தில் மாற்றங்கள் குறித்த விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நாளை மறுநாள் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2020-21-ஆம் கல்வி ஆண்டில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை 30% வரை  சிபிஎஸ்இ திருத்தியமைத்தது.  குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உள்மதிப்பீடு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுக்கான தலைப்புகளாக இருக்காது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்தது.

முன்னதாக, கொரோனா  பெருந்தொற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதின் தொடர்ச்சியாக வரும் 19ம் தேதியன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tamilnadu School Reopening
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment