அரசு பள்ளிகளில் பை, செருப்பு வழங்குவதில் தாமதம்; தவிக்கும் மாணவர்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்னும் பை, செருப்பு வழங்கப்படவில்லை; சில இடங்களில் ஒரு செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக புகார்

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்னும் பை, செருப்பு வழங்கப்படவில்லை; சில இடங்களில் ஒரு செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக புகார்

author-image
WebDesk
New Update
tamil nadu school

School students

தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கி ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இன்னும் இலவச பைகள் மற்றும் செருப்புகள் வழங்கப்படாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவச சீருடை, புத்தகங்கள், பை, செருப்பு, நோட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அதாவது அரசுப் பள்ளி மாணவர்களிடம் பள்ளிக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசால் இவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்: டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், சானிட்டரி நாப்கின்கள், சைக்கிள்கள், சீருடைகள், பள்ளிப் பைகள், கிரேயான்கள், வண்ண பென்சில்கள், காலணி, உல்லன் ஸ்வெட்டர்கள் உள்ளிட்ட கல்வி கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக நலத்துறை மூலம் நான்கு செட் பள்ளி சீருடைகளும் வழங்கப்படுகின்றன.

Advertisment
Advertisements

இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான இலவச பை மற்றும் செருப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கிழிந்த பழைய பைகளை கொண்டு வருவதோடு, சில மாணவர்கள் வெறுங்காலுடன் பள்ளிக்கு வருகின்றனர். மேலும், ஒரு சில இடங்களில் ஒரு செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிரமத்தை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு, பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் பல மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டது, ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறக்கும் நேரத்திலே வழங்கப்பட்டது. இருப்பினும், மற்ற பொருட்களை வழங்குவதில் தாமதம் தொடர்கிறது. சீருடைகள், பைகள், செருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களை, பாடப்புத்தகங்களுடன் வழங்கினால், அவற்றை வாங்க முடியாத மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் இன்னும் வழங்கப்படாததால், பல மாணவர்கள் தங்கள் பெற்றோரை தங்களுக்கு வாங்கித் தரும்படி வற்புறுத்துகின்றனர். இது திட்டத்தின் முழு நோக்கத்தையும் தோற்கடிக்கிறது என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு சில இடங்களில் மாணவர்களுக்கு ஒரே ஒரு செட் சீருடை மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் ஒரே சீருடையை மாணவர்கள் தினமும் அணிவதில் சிரமம் உள்ளதால், அந்தப் பள்ளிகளில் வண்ண உடைகள் அணிந்து வர அனுமதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அதிகாரிகள், விநியோகத்தில் தாமதம் இல்லை என்று மறுத்து, அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளதாகக் கூறினர். மேலும், சில இடங்களில் தரம் இல்லாததால் பைகள் அல்லது செருப்புகள் உற்பத்தியாளரிடம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் சிறிது தாமதம் ஏற்படலாம், என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu School Education Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: