தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், நேரக் காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Junior Mechanic
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 71,900
Junior Electrician
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 71,900
Assistant Offset Machine Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 19
கல்வித் தகுதி : Diploma in Printing Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 71,900
Special Language DTP operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BCA or BSc Computer Science/ Information Technology படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: 35,600 – 1,30,800
Time Keeper
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 18,200 – 67,100
வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 110, அண்ணா சாலை, சென்னை - 2.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“