/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவி ஆப்செட் மிஷின் டெக்னீசியன் (Assistant Offset Machine Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Printing Technology or Technical Trade Certificate in Litho Offset Machine படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 71,900
இளநிலை மின்வினைஞர் (Junior Electrician)
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Technical Trade Certificate (Electrician) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 71,900
இளநிலை கம்மியர் (Junior Mechanic)
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Technical Trade Certificate (Mechanic) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 71,900
பிளம்பர் கம் எலக்ட்ரீஷியன் (Plumber Cum Electrician)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Technical Trade Certificate (ITI) in Plumbering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 71,900
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் பி.சி, எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.stationeryprinting.tn.gov.in/ComNoB2-19303-2025-dtd-19-8-2025.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 110, அண்ணா சாலை, சென்னை - 2.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.09.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.