சென்னை உயர்நீதிமன்றத்தில் 19 இடங்களும், மதுரை நீதிமன்றத்தில் 18 பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட 37 சட்ட அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் 19 காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப திட்டமிட்டுள்ள நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் 18 காலி பணியிடங்களையும் நிரப்ப உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில், பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன: ஏ.ஏ.ஜி (ஒன்று), சிறப்பு அரசு வழக்கறிஞர் (5), கூடுதல் ஜிபி (1), அரசு வழக்கறிஞர் - சிவில் தரப்பு (8) , அரசு வழக்கறிஞர் – கிரிமினல் தரப்பு (3) மற்றும் அரசு வழக்கறிஞர் – வரிகள் (1) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
மதுரை உயர் நீதிமன்ற அமர்வில், சிறப்பு அரசு வழக்கறிஞர் (3), கூடுதல் ஜிபி (3), அரசு வழக்கறிஞர் - சிவில் தரப்பு (6) மற்றும் அரசு வழக்கறிஞர் கிரிமினல் தரப்பு (6) ஆகிய காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவங்களை www.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த படிவங்களை பொதுத் துறை, செயலகம், சென்னை 600009 என்ற முகவரிக்கு ஜூலை 22-ம் தேதிக்குள் அனுப்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“