தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகத்தில் (TNHDC) மேலாண்மை உதவியாளர்கள் மற்றும் தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.08.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
Programme Management Assistants
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : MBA, B.Tech (Textiles), Bachelor of Design, P.G.in Economics/ Applied Research படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 50,000
Data Entry Operators
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கவும், தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://loomworld.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://loomworld.in/wp-content/uploads/2023/08/PMU-Recruitment-Notice.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil