Tamil Nadu News: தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்காக மாவட்ட ஆட்சியர்கள் அரசின் உத்தரவின்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் விளைவாக, 2019ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்தது. இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அக்டோபர் மாதம் 10ஆம் தேதியிலிருந்து தாலுக்கா மூலமாக அறிவிப்பாணை வெளியிடப்படும். காலி பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை அளிப்பதற்கு கடைசி தேதி நவம்பர் 7 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து நவம்பர் 14ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யவிருக்கின்றன. இதன்பிறகு, வாசிப்பு மற்றும் எழுத்து திறன் பரீட்சையை நவம்பர் 30ஆம் தேதி நடக்கவிருக்கிறது. மேலும், டிசம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகள் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
டிசம்பர் 19ஆம் தேதி, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு அன்றே பணி ஆணைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil