/tamil-ie/media/media_files/uploads/2019/09/heal.jpg)
tamil nadu, government job, tamil nadu government, health and family welfare department, medical advisor, recruitment, graduates, diploma holders, தமிழக அரசு, சுகாதாரத்துறை, மருத்துவ ஆலோசகர், பணிவாய்ப்பு, பட்டதாரிகள்
தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு உட்பட்ட ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் : 38
சித்த மருத்துவ ஆலோசகர் - 32
ஆயுர்வேதா மருத்துவ ஆலோசகர் - 03
யுனானி மருத்துவ ஆலோசகர் - 01
ஹோமியோபதி மருத்துவ ஆலோசகர் - 02
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு ஏற்ற துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம், தமிழ்நாடு ஓமியோபதி மெடிக்கல் கவுன்சில் ஆகியவற்றில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம் : இந்த பணியிடங்களுக்கு தேசிய ஆயுஷ் குழு திட்டத்தின் படி சம்பளம் வழங்கப்படும். சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ .1000 சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு
ஜூலை 1,2019 தேதியின் படி 57 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - அக்டோபர் 18, 2019
தேர்வுமுறை : கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்திசெய்து குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us