கலை அறிவியல் கல்லூரிகளில் 40 வயது வரை சேரலாம்; அரசாணை வெளியீடு

தமிழ்நாடு பி.ஏ, பி.எஸ்.சி போன்ற படிப்புகளை படிக்க கலை அறிவியல் கல்லூரிகளில் 40 வயது வரை சேர்க்கை பெறலாம்; உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

தமிழ்நாடு பி.ஏ, பி.எஸ்.சி போன்ற படிப்புகளை படிக்க கலை அறிவியல் கல்லூரிகளில் 40 வயது வரை சேர்க்கை பெறலாம்; உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

author-image
WebDesk
New Update
CBE engineering colleges

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 43 ஆகவும் உயர்த்தப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisment

நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இளநிலை படிப்பில் சேர்ந்து படிப்பதில் வயதில் தளர்வு கோரி, கல்லூரி முதல்வர்கள் வாயிலாகவும், இணை இயக்குனர் வாயிலாகவும் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருந்தனர். இதனை அடுத்து கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளான பி.ஏ, பி.எஸ்.சி போன்ற படிப்புகளில் சேருவதற்கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 43 ஆகவும் உயர்த்தி தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை செயலர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

தற்போது, கலை அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி.ஏ, பி.பி.எம் போன்ற இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கான வயது வரம்பு 21 ஆக இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, பி.சி-முஸ்லிம் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பெண்களுக்கும் 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் (2025-2026) கலை அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி பயில விரும்பும் ஆர்வமுடைய மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான உச்ச வயது வரம்பை அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 40 என நிர்ணயித்து ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டார். 

அக்கருத்துருவை ஆய்வு செய்து 2025-2026-ம் கல்வி ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் வயது தளர்வும் (45 வயது வரை), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் வயது தளர்வும் (43 வயது வரை) அளித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு உயர்கல்வித்துறை செயலர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

College Admission Arts And Science College

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: