Advertisment

TN HSC 11th Result: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.17% பேர் தேர்ச்சி

Tamil Nadu HSC 11th Result 2024 Updates: தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; கூடுதல் தகவல்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

TN HSC 11th Result 2024 Updates: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) 11 ஆம் வகுப்பு அல்லது பிளஸ் 1 தேர்வு முடிவுகளை மே 14 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியிடுகிறது. கடந்த ஆண்டு 11ம் வகுப்பு தேர்வை  7,76,844 மாணவர்கள் எழுதி உள்ளனர். இதில்  90.93% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதுபோல தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அரசு பள்ளியின் தேர்ச்சி விகிதம் இந்த முறை அதிகரித்துள்ளது. ஆண்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைந்திருந்தது.

Advertisment

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி முடிவடைந்தது. சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர்.இந்தநிலையில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியாகிறது. ரிசல்ட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம் தெரிந்துக் கொள்ள முடியும். இணையதளங்களில் மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழைய வேண்டும். 

Read in english 

 

  • May 14, 2024 12:39 IST
    11-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் – அன்பில் மகேஷ்

    11-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இதில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் இனிவரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் எனும் எனது விருப்பத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்



  • May 14, 2024 12:10 IST
    11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: பாட வாரியான தேர்ச்சி சதவீதம்

    வேதியியல் - 96.20%

    உயிரியல் - 98.25%

    கணிதம் - 97.21%

    விலங்கியல் - 96.40%

    தாவரவியல் - 91.88%

    கணினி அறிவியல் - 99.39%

    அறிவியல் பாடங்கள் - 94.31%

    கலைப்பிரிவு பாடங்கங் - 72.89%

    தொழிற்கல்வி பாடங்கள் - 78.72%



  • May 14, 2024 11:07 IST
    11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: கடைசி இடத்தில் வேலூர்

    11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய 2 இடங்களில் திருவள்ளூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் உள்ளன.



  • May 14, 2024 10:57 IST
    241 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

    11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 241 அரசுப் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • May 14, 2024 10:40 IST
    11ம் வகுப்பு தேர்விலும் அதிக அளவு தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை

    11ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகளில் 4,04,143 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3, 35,396 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 94.69 % தேர்ச்சி, மாணவர்கள் 87.26% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  



  • May 14, 2024 10:12 IST
    8,418 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

    11ம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்தாண்டு 8,418 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.



  • May 14, 2024 10:10 IST
    90.90% சிறைவாசிகள் தேர்ச்சி

    தமிழ்நாட்டில் 90.90% சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 187 சிறைவாசிகளில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  



  • May 14, 2024 10:04 IST
    91.27% மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.27%  மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 8,221 மாற்றுத் திறனாளி மாணாவர்களில் 7,504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  



  • May 14, 2024 10:00 IST
    அரசுப் பள்ளிகள் 85.75% தேர்ச்சி : பெண்கள் பள்ளிகள் 94.46 % தேர்ச்சி

    sasa



  • May 14, 2024 09:50 IST
    100 % மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

    சச



  • May 14, 2024 09:47 IST
    பாடப் பிரிவு: தேர்ச்சி சதவிகிதம்

    இயற்பியல் - 97.23% வேதியியல் -96.20% உயிரியல் -98.25% கணிதம் -97.21% தாவரவியல் -91.88% விலங்கியல் -96.40% கணினி அறிவியல் - 99.39% வணிகவியல் - 92.45% கணக்குப் பதிவியல் - 95.22%



  • May 14, 2024 09:46 IST
    அறிவியல் பாடப் பிரிவுகளில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி

    அறிவியல் - 94.31% வணிகவியல் - 86.93% கலைப் பிரிவுகள்- 72.89% தொழிற்பாடப் பிரிவுகள் - 78.72%



  • May 14, 2024 09:42 IST
    டாப் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

    96.02 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடம்; 95.56 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடம் பெற்றுள்ளது. 95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம்  3-வது இடம் பெற்றுள்ளது.



  • May 14, 2024 09:38 IST
    11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி

     11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.69 % தேர்ச்சி, மாணவர்கள் 87.26% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  



  • May 14, 2024 09:35 IST
    91.17 % சதவிகிதம் பேர் தேர்ச்சி

    11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 91.17 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 



  • May 14, 2024 09:29 IST
    11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

    11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.  https://tnresults.nic.in/ என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.  



  • May 14, 2024 09:09 IST
     தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்

    https://tnresults.nic.in/     தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  



  • May 14, 2024 09:05 IST
    11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : சரியாக 9.30 மணிக்கு வெளியாகும்

    சரியாக 9.30 மணிக்கு, இந்த லிங்கில் https://tnresults.nic.in/ முடிவுகள் வெளியாகும். 



  • May 14, 2024 09:00 IST
    பிளஸ் 1 ரிசல்ட் இன்று ரிலீஸ்; மதிப்பெண் பட்டியல் டவுன்லோட் எப்படி?

    1. tnresults.nic.in, dge.tn.gov.in. என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
    2. HSE+1 result 2024’, என்ற ஆப்ஷன் கணினி திரையில் தோன்றும் அதை கிளிக் செய்யவும்
    3. பிறந்த தேதி மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரை டைப் செய்யவும்
    4. Get Marks என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
    5. இப்போது உங்கள் மதிப்பெண் கணினி திரையில் தோன்று
    6. அதில் Download என்ற ஆப்ஷனை நாம் கிளிக் செய்தால் மதிப்பெண் பட்டியல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் .



  • May 14, 2024 08:46 IST
    11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : செல்போனில் குறுஞ்செய்தி மூலம் பெற முடியுமா?

    கடந்த ஆண்டு, மாணவர்கள் தங்களின்  11 ஆம் வகுப்பு முடிவுகளைப் ஏற்கனவே  பதிவு செய்யப்பட்ட  மொபைல் எண்ண்கள் மூலம் பெற்றனர். இந்த முறையும், மாணவர்களின் 11ம் வகுப்பு முடிவுகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு அனுப்பப்படும்மாணவர்கள் தங்கள் முடிவுகளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மத்திய கிளை நூலகங்களின் தேசிய தகவல் மையத்திலும் பெறலாம்.  



  • May 14, 2024 08:35 IST
    தேர்ச்சி சதவிகிதம் : கடந்த ஆண்டு டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

    1. திருப்பூர்- 96.38 %
    2. ஈரோடு: 96.18 %
    3. கோவை : 95.73 %
    4. நாமக்கல் : 95.60 %
    5. தூத்துக்குடி : 95.43 %



  • May 14, 2024 08:31 IST
    கடந்த இரண்டு ஆண்டுகளின் தேர்ச்சி சதவிகிதம்

    2023:  தேர்ச்சி சதவிகிதம் : 90.93%

    2022 : தேர்ச்சி சதவிகிதம் : 90.07 %



  • May 14, 2024 08:19 IST
    ரிசல்ட் செக் செய்வது எப்படி ? டெஷன் வேண்டாம்: ஈசிதான்

    • tnresults.nic.in, dge.tn.gov.in. என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
    • ’HSE+1 result 2024’, என்ற ஆப்ஷன் கணினி திரையில் தோன்றும் அதை கிளிக் செய்யவும்
    • பிறந்த தேதி மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரை டைப் செய்யவும்
    • Get Marks என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
    • இதை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  



  • May 14, 2024 08:12 IST
    இந்த இணையதளங்கள் ரொம்ப முக்கியம்

    - dge.tn.gov.in/result
    - tnresults.nic.in 
    - dge1.tn.nic.in 



  • May 14, 2024 08:00 IST
    பாஸ் ஆகலையா ? கவலை வேண்டாம் : உடனே துணை தேர்வு இருக்கு

    தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் துணைத் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் இருக்கும். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 11ம் வகுப்பு  துணைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்.



  • May 14, 2024 07:59 IST
    தேர்ச்சி மதிப்பெண்கள் பற்றிய விரிவான விளக்கம்

    100க்கு ஆறு பாடங்களில் ஒவ்வொன்றிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். கோட்பாட்டில் 70 மதிப்பெண்கள் உள்ள பாடங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் தியரியில் 15 மதிப்பெண்கள் மற்றும் மொத்தம் 35 மதிப்பெண்களைப் பெற வேண்டும், அதே நேரத்தில் பிராக்டிகல் தேர்வு மற்றும் இண்டர்நல் தேர்வுகளுக்கு குறிப்பட்ட அளவு மதிப்பெண் பெற வேண்டும் என்ற எந்த தேர்ச்சி அளவும் இல்லை.



  • May 14, 2024 07:51 IST
    முதல் இடம் பிடித்த மாணவர்களின் பெயர்கள் ஏன் அறிவிக்கப்படுவதில்லை தெரியுமா?

    2018 முதல், தமிழ்நாடு ஹெச்எஸ்இ வாரியம் 'விளம்பரம்' செய்வதையோ அல்லது முதலிடம் பிடித்த மாணவர்களின் பெயர்களை அறிவிப்பதையோ நிறுத்தியுள்ளது. மாறாக, அதிக தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்யும் நகரம் அல்லது மாவட்டத்தை அறிவிக்கிறது.



  • May 14, 2024 07:33 IST
    11ம் வகுப்பு தேர்வு : கடந்த ஆண்டு தேர்ச்சி முடிவுகளின் பட்டியல்

    கடந்த ஆண்டு 11ம் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை: 7,76,844

    கடந்த ஆண்டு 11ம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை: 7,06,413

    கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம்: 90.93%



  • May 14, 2024 07:10 IST
    பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • May 14, 2024 07:07 IST
    எந்த இணையதளத்தில் தேர்வு முடிவுகள் செக் செய்யலாம்?

    https://results.digilocker.gov.in/,  www.tnresults.nic.in , www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.



  • May 14, 2024 07:04 IST
    11 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

    11 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.



  • May 13, 2024 17:30 IST
    ரிசல்ட் செக் செய்வது எப்படி?

    படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் -- tnresults.nic.in

    படி 2: முகப்புப்பக்கத்தில் ஒளிரும் இடைநிலை தேர்வு முடிவுகளை கிளிக் செய்யவும்

    படி 3: உங்கள் ரோல் எண்ணை உள்ளிட்டு தேர்வு பொத்தானைக் கிளிக் செய்யவும்

    படி 4: உங்கள் மதிப்பெண்கள் காட்டப்படும்



Exam Result School Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment