Advertisment

பிளஸ் 2 பொதுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

அனைத்து பள்ளிகளும் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
exam

10 ஆம் வகுப்பு

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

Advertisment

இதையும் படியுங்கள்: GATE தேர்வு ஹால் டிக்கெட்; டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் இந்த ஆண்டு 8 லட்சம் மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக பிப்ரவரி மாதம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி முதல் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment