10, 11-ம் வகுப்பு துணைத் தேர்வு; ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? தேர்வுத்துறை அறிவிப்பு

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் ஜூன் 25 ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகும்; தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ள தேர்வுத்துறை அறிவுறுத்தல்

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் ஜூன் 25 ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகும்; தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ள தேர்வுத்துறை அறிவுறுத்தல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Students writing exam

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை ஜூன் 25 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; 

தமிழகத்தில் 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட) தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால்டிக்கெட்) ஜூன் 25 ஆம் தேதி முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய, விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு உள்நுழைந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.

11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி, நேரம் தொடர்பான விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Advertisment
Advertisements

10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பு நடைபெறும் பள்ளியிலேயே செய்முறைத் தேர்வு ஜூன் 26 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியை அணுகி தெரிந்துக் கொள்ளலாம். 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

10th Exam School Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: