சர்வே லைசன்ஸ் பெற 3 மாத பயிற்சி; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

தமிழக அரசின் நில அளவைத் துறையின் சர்வே லைசன்ஸ் பெறுவதற்கான 3 மாத பயிற்சிக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்; தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள் இங்கே

தமிழக அரசின் நில அளவைத் துறையின் சர்வே லைசன்ஸ் பெறுவதற்கான 3 மாத பயிற்சிக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்; தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள் இங்கே

author-image
WebDesk
New Update
civil jobs

தமிழகத்தில் சிறந்த வேலை வாய்ப்பு தரக்கூடிய நில அளவைத் துறையின் சர்வே உரிமம் பெறுவதற்கான பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisment

இதுதொடர்பாக தமிழக அரசின் நிலஅளவை மற்றும் நிலவரி திட்டத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; 

நில அளவை செய்வதற்கான உரிமம் (சர்வே லைசென்ஸ்) பெறுவதற்கான 3 மாத கால பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சியில் பி.இ சிவில் இன்ஜினியரிங் (B.E. (Civil Engineering)), ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் (B.E., (Geo – Informatics)), எம்.எஸ்.சி புவியியல் (M.Sc., (Geography)), புவி தொலையுணர்வு மற்றும் ஜியோ-இன்பர்மேஷன் டெக்னாலஜி (M.Sc., (Earth Remote Sensing and Geo – Information Technology)) பட்டதாரிகளும், டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் (Diploma in Civil Engineering) படித்தவர்களும் சேரலாம்.

மேலும் National Trade Certificate in the Trade of Surveyor awarded by the National Council for Vocational Training (For Surveyor) அல்லது Certificate in Army Trade Surveyor (Field) issued by the Madras Engineering Group சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்தும் நில அளவை செய்வதற்கான உரிமம் பெறுவதற்குரிய 3 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment
Advertisements

இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் பயிற்சி குறித்த முழு விபரங்களையும் https://tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 1-ம் தேதி ஆகும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: