Tamil Nadu Matriculation Schools Reopen Date: தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் திறப்பும் ஜனவரி 4-ம் தேதிதான் என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அறிவித்திருக்கிறது. முன்னதாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறப்புத் தேதி ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
தமிழகத்தில் டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்கிறது. வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பள்ளிகள், பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் இந்தத் தேர்தல்கள் அமைந்ததால், அது வசதியாகப் போனது.
Tamil Nadu Matriculation Schools News: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறப்பு ஜனவரி 4
அரையாண்டுத் தேர்வு முடிந்து ஜூன் 3-ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கும் என முதலில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் வாக்குச் சீட்டு முறைப்படி தேர்தல் நடந்திருப்பதால், 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கக்கூடும்.
எனவே ஆசிரியர்கள் மறுநாள் பள்ளிக்கு வருவதிலும், பள்ளிகள் தயாராக இருப்பதிலும் சிக்கல் எழலாம் என அரசு கவனத்திற்கு ஆசிரியர் அமைப்புகள் கொண்டு வந்தன. இதை ஏற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறப்பை ஜனவரி 3-ல் இருந்து ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடந்த திங்கட் கிழமை அறிவித்தது.
மெட்ரிக் பள்ளிகள் பற்றி எந்த அறிவிப்பும் அன்று வெளியாகாததால், ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 3-ம் தேதியே மெட்ரிக் பள்ளிகள் திறக்குமா? என்கிற கேள்வி எழுந்தது. தமிழ்நாடு முழுக்க மொத்தம் நான்காயிரத்திற்கும் அதிகமான மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் இதில் ஒரு தெளிவு கிடைக்காமல் குழம்பிப் போயிருந்தார்கள்.
இந்தச் சூழலில் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில், மெட்ரிக் பள்ளிகளும் ஜனவரி 4-ம் தேதியே திறக்கப்படும் என தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.