தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான இளங்கலை எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி இயக்குனரகம் வரவேற்கிறது. புதன்கிழமை காலை 10 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான விவரக்குறிப்பு மற்றும் விண்ணப்பங்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கிடைக்கும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 7 என்று இயக்குனரகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: டாப் மருத்துவக் கல்லூரிகள் பட்டியல்: கர்நாடகாவில் எம்.பி.பி.எஸ் அட்மிஷன் நடைமுறை எப்படி?
மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதை விரும்பாததால், கவுன்சிலிங்கை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்துள்ளோம். பத்து நாட்களுக்கு முன்பு முடிவுகள் வந்த நிலையில், சேர்க்கை செயல்முறையை சரியான நேரத்தில் முடிக்க நாங்கள் அனைத்தையும் செய்கிறோம் என்பதை மாணவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம், என்று இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறினார்.
இருப்பினும், செயல்முறை குறித்து தெளிவு இல்லை. உதாரணமாக, முதன்முறையாக அகில இந்திய கவுன்சிலிங்குடன் ஒரே நேரத்தில் நடத்தப்படும் கவுன்சிலிங்கிற்கான தேதிகள் இன்னும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் வெளியிடப்படவில்லை. புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடும் வரை தேர்வுக் குழுவும் காத்திருக்கிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இன்னும் இடங்களின் ஒதுக்கீட்டை தயாரிக்கவில்லை, இது பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு கல்லூரிகளிலும் உள்ள இடங்களின் எண்ணிக்கையை வழங்கும்.
பொது கவுன்சிலிங்கிற்காக தனியார் கல்லூரிகளில் உள்ள மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் இயக்குநரகம் மாநில இயக்குனரகத்தைக் கேட்டுக் கொண்ட நிலையில், மாநில இயக்குனரகம் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ நிறுவனங்களில் மேலாண்மை ஒதுக்கீடு இடங்கள் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் சேர்க்கை வழங்குவதாகக் கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil