தமிழகத்தில் 650 எம்.பி.பி.எஸ் சீட் அதிகரிப்பு; 7.5% இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்

TN MBBS BDS Admission: தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு 3 ஆம் சுற்றுக்கு கூடுதலாக 650 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்ப்பு; 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு எத்தனை இடங்கள்?

TN MBBS BDS Admission: தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு 3 ஆம் சுற்றுக்கு கூடுதலாக 650 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்ப்பு; 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு எத்தனை இடங்கள்?

author-image
WebDesk
New Update
doctor

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கிற்கு முன்னதாக, தமிழ்நாடு கவுன்சலிங் கமிட்டி புதிதாக 650 எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களை சீட் மேட்ரிக்ஸில் சேர்த்துள்ளது. இதன் காரணமாக 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு 30 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைத்துள்ளன.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. தற்போது மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள எட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 550 கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களையும், புதிய தனியார் மருத்துவப் பல்கலைக்கழகமான தக்‌ஷஷிலா மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும் அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 9,950 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டுக்கான சேர்க்கையைத் தொடங்கியபோது, அரசுக் கல்லூரிகளில் 5,200 மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 4,000 என 9,200 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்தன. 

இந்தநிலையில் தேசிய மருத்துவ ஆணையம் முதல் சுற்றில் 100 இடங்களை அனுமதித்தது. பின்னர் மருத்துவக் கல்லூரிகள் இரண்டாவது மேல்முறையீட்டிற்குச் சென்ற பிறகு எம்.பி.பி.எஸ் இடங்கள் மேலும் அதிகரித்தது.

Advertisment
Advertisements

தக்‌ஷஷிலா கல்லூரியைத் தவிர, செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி, அன்னை மருத்துவக் கல்லூரி மற்றும் தாகூர் மருத்துவக் கல்லூரிக்கு தலா 100 இடங்களும், சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பனிமலர் மருத்துவக் கல்லூரி மற்றும் அருணை மருத்துவக் கல்லூரிக்கு தலா 50 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

இதன்காரணமாக 7.5% ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படுவதற்காக 30 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இரண்டாம் சுற்றின் முடிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களும் நிறைவடைந்த நிலையில், புதிதாக சேர்க்கப்பட்ட 650 இடங்கள் மூலம் மேலும் 30 அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மேலும் புதிய எம்.பி.பி.எஸ் இடங்கள் காரணமாக மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்கு மொத்தமாக 1518 எம்.பி.பி.எஸ் இடங்களும், 631 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன.

இதற்கிடையில், 3 ஆம் சுற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மாநில கவுன்சலிங்கின் சுற்று 3 முடிவுகள் செயலாக்கப்படுவதற்கு முன்பு மாநில ஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்படுவார்கள். அகில இந்திய கவுன்சலிங்கின் 3 ஆம் சுற்றில் இடம் ஒதுக்கப்பட்ட ஆனால் சேர்க்கை பெறாத மாணவர்கள் மாநில ஒதுக்கீடு சுற்று 3 இல் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

மூன்றாம் சுற்றில் நிரம்பாத சிறுபான்மையினர் இடங்கள் மற்றும் என்.ஆர்.ஐ இடங்கள் இறுதி சுற்று கலந்தாய்வில் பொது பிரிவுக்கு மாற்றப்படும். 3 ஆம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டால், அடுத்த சுற்றில் கலந்துக் கொள்ள முடியாது. நீங்கள் கல்லூரியில் சேராவிட்டாலும், அடுத்த சுற்றில் கலந்துக் கொள்ள முடியாது. 

Mbbs Counselling

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: